செவ்வந்தி
  • உனக்காக
  • மழைத்துளி
  • பிடிப்பு
  • நங்கூரமற்று
  • நாடுகாண்
  • நெத்தலிகள்
  • பறவையிறகின்

உனக்காகச் செய்யப்பட்ட என் இரவுகள்....

நதிக்கரையில்
தோற்றுப்போய்க் கிடக்கும்
சருகுகளென
மனம் வீழ்ந்துகிடக்கிறதுகடலைச் சென்றடைய முடியாமல்...
உனக்காகச் செய்யப்பட்டஎன் இரவுகளில்
துடித்துக்கொண்டிருக்கிறது
என் மடியில் உறங்கும்
உன் நினைவுகள்....என்னுடைய
எல்லா அசைவுகளிலும்
நீயும் வந்துகொண்டிருக்கிறாய்
அறிவுரை கூறிக்கொண்டும்
ஆறுதல்படுத்திக்கொண்டும்
சில வேளைகளில்
திட்டிக்கொண்டும் கூட......
நீண்ட பயணங்களும்
நிரம்பி வழிந்துகொண்டிருக்கும் சிக்கல்களும்
தீர்ந்துவிடும் போலிருக்கிறது
நீ கிடைத்துவிடும் வினாடிகளில்.......
Powered by Create your own unique website with customizable templates.