செவ்வந்தி
  • உனக்காக
  • மழைத்துளி
  • பிடிப்பு
  • நங்கூரமற்று
  • நாடுகாண்
  • நெத்தலிகள்
  • பறவையிறகின்

எமது நாடுகாண் பயணங்கள்...


 சிந்துபாத் போலன்றி
சிந்தும் இரத்தத்துளிகளுடன் தொடர்கின்றது
எமது நாடுகாண் பயணங்கள்
கொலம்பஸ் போலன்றி
கொடிய விஷஜந்துக்கள் மேல் தொடர்கிறது
எமது நாடுகாண் பயணங்கள்
ஊர்சுற்றும் வேட்கையிலன்றி
உயிர் காக்கும் ஆசையில் தொடர்கின்றது
எமது நாடுகாண் பயணங்கள்

ரஷ்யாவின் பனிமலைகள்
கொலம்பியச் சுரங்கங்கள்
ஜோர்தானின் நதிக்கரைகள்
நைஜீரியப் பழங்குடில்கள்
கிறிஸ்மத் தீவுகளின் கடற்கரைகள்
பப்புவாநியூகினியின் எரிமலைகளென
உலகப் பரப்பெங்கும்
எமது காலடித்தடங்களும்
கண்ணீரும் கனவுகளும் சுமந்த எம்
மூச்சுகாற்றும்...

ஒற்றை யுரேனியச் சிறுதுகளாய்
சக்தியற்று நாம்..
அபரிமிதமான வாழ்க்கையில்
மிதந்துகொண்டே....
நிலைபெறாமல் இன்னமும்...
Powered by Create your own unique website with customizable templates.